காதலுருடன் ஸ்ருதிஹாசன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். சென்ற பொங்கலுக்கு அவர் நடிப்பில் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. அந்த இரண்டு திரைப்படங்களுக்கும் அவர் தலா 2.5 கோடி சம்பளமாக வாங்கியதாகவும் செய்தி வெளியானது.

இவர் தற்போது பிரபாசுடன் இணைந்து சளார் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் அவரின் காதலர் சாந்தனு பார்ட்டி கொடுத்திருக்கின்றார். அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.