சாருக்கான் ரசிகரை கலாய்த்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். அண்மையில் இத்திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது முன்பதிவில் மாஸ் காட்டி வருகின்றது. வருகின்ற 25ஆம் தேதி தியேட்டரில் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் திரைப்படத்தின் முன்பதிவு ஆரம்பமாகி இருக்கின்றது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு வாங்கிய டிக்கெட்டுகளை சரமாக போஸ்டர் மீது தொங்கவிட்ட ரசிகரை ஷாருக்கான் கலாய்த்து இருக்கின்றார். இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, வீட்டுக்குப் போகும்போது மறக்காமல் டிக்கெட்டுகளை கொண்டு செல்லுங்கள், மறந்துட்டு சென்று விடாதீர்கள் என குறிப்பிட்டு இருக்கின்றார்.