பேட்டி ஒன்றில் ராஷ்மிகா மந்தனா மிகவும் மனமுடைந்து பேசி உள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்ற 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் ரிலீசானது.

இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கலக்கி வருகின்றது. இந்த நிலையில் அண்மையில் பேட்டியளித்த ராஷ்மிகா மனமுடைந்து பேசி இருக்கின்றார். அவர் பேசியதாவது, சில நேரங்களில் எனது உடலால் மக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகின்றேன். நான் ஒர்க்அவுட் செய்யாமல் குண்டாக இருந்தாலும் தப்பு, வொர்க் அவுட் செய்து ஒல்லியாக இருந்தாலும் தப்பு. பேசினாலும் தப்பு, பேசவில்லை என்றாலும் தப்பு. நான் என்னதான் செய்வது, சினிமாவை விட்டு வெளியேறிவிடவா? இல்லை வேண்டாமா? என்னிடம் ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் அதை தெளிவாக கூறுங்கள். தவறான முறையில் எண்ணாதீர்கள். உங்களுடைய வார்த்தைகள் மனரீதியாக காயப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.