தமிழ் சினிமா உலகில் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி தற்போது படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகின்றார். இவர் தற்போது ஏழு கடல் ஏழுமலை என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அந்த படத்தை ராம் இயக்க நிவின்பாலி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் மீது அஞ்சலிக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றதாம். இந்த படம் மூலம் தன்னுடைய மார்கெட் எகிறும் என்ற உறுதியில் இருக்கின்றாராம் அஞ்சலி.

இந்த திரைப்படத்திற்கு பிறகு ஒப்பந்தமாகும் திரைப்படங்களுக்கு தன்னுடைய சம்பளத்தை அஞ்சலி உயர்த்தி இருக்கின்றாராம். அவர் தன்னுடைய சம்பளத்தை 1 கோடி ரூபாய் வரை உயர்த்தி இருப்பதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றார்கள். அவர் நடிப்பில் இறுதியாக வெளிய வந்த வெப் சீரியல் வெற்றி பெறாத நிலையில் தன்னுடைய சம்பளத்தை 1 கோடி ரூபாய் உயர்த்திருப்பது தயாரிப்பாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது.