சரித்திர கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

நடிகை வசுந்தரா பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று, வட்டாரம், ஜெயம் கொண்டான், போராளி, பக்ரீத், கண்ணே கலைமானே என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது, மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி, பிரசன்னா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் கண்ணை நம்பாதே திரைப்படத்திலும் ஜேபி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் தலைகூந்தல் உள்ளிட்ட திரைப்படங்களையும் நடித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் லட்சுமி நாராயணன் இயக்குகின்ற திரில்லர் திரைப்படத்திலும் நடித்து வருவதாக தெரிவித்தார். ஓடிடி தளங்கள் தற்போது புதுவிதமான பல படைப்புகளை தந்து வருகின்றது. இதன் மூலம் பல புதிய இயக்குனர்கள் உருவாகி வருகின்றார்கள். ஓடிடி நல்ல மாற்றம் தான். இதனால் சினிமா என்ன ஆகுமோ என பலரும் கவலைப்பட்ட நிலையில் சினிமா துறை தனக்கான வழியைத் தானே கண்டு பிடித்துக் கொள்ளும். பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆசை இருக்கின்றது. இந்த வருஷத்தில் நிறைய ஓடிடி திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.