தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ராம்சரண். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர்  திரைப்படம் தமிழ், இந்தி, கன்னடம் என பழமொழிகளில் வெளியானது. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது அண்மையில் கிடைத்தது. இது பற்றி பேட்டி அளித்த ராம்சரண் பேசியுள்ளதாவது, ஆர் ஆர் ஆர் படம் கோல்டன் விருது வென்று சரித்திரம் படைத்திருக்கின்றது.

இசையமைப்பாளர் கீரவாணி இந்த விருதை பெற்றிருப்பது பெருமையாக உள்ளது. ஆசியாவிலேயே கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் பாடலாக தெலுங்கு பாடல் இருப்பது தெலுங்கு மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கின்றத. இது எல்லாம் ஒரு கனவு போல உள்ளது. இந்த விருது எங்களின் பொறுப்பை மேலும் அதிகமாக்கி உள்ளது. சினிமா இந்த அளவிற்கு உயர்ந்த நிற்பதை பார்க்கும் போது பெருமையாக இருப்பதாகவும் ஹாலிவுட் இயக்குனர்களின் திரைப்படங்களின் நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.