அஜித் பற்றி சுவாரசியமான தகவல்கள்.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.

இத்திரைப்படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன்பின் இரண்டாவதாக வெளியான காசேதான் கடவுளடா பாடலுக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இதன்பின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா பாடல் வெளியானது. சீண்டுனா சிரிப்பவன், சுய வழி நடப்பவன் என்ற வரிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன்பின் சென்ற டிசம்பர் 31-ம் தேதி துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.  மேலும் தணிக்கைக் குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

அஜித் குமார் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அஜித் குமார் செல்போன் பயன்படுத்துவதை இல்லை. அண்மையில் பேட்டி ஒன்றில் த்ரிஷாவிடம் அஜித்தின் எண்ணை எந்த பெயரை சேமித்து வைப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்ட போது அவர் செல்போன் பயன்படுத்துவதில்லை என தெரிவித்தார். ஆனால் அவர் மக்களுடன் எப்படி தொடர்பு கொள்கின்றார் என்பது தெரியுமா? அஜித் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு புதிய சிம் கார்டு பெற்று அதனை பயன்படுத்துகின்றார்.

படம் ரிலீஸ் செய்யப்பட்டதும் புதிய திரைப்படத்திற்காக சிம் கார்டை மாற்றிக் கொள்கின்றார். இது மிகவும் தொழில்முறையாக தான். காரணம் அவருடன் வேலை செய்யாத போது வெவ்வேறு குழுக்களிடமிருந்து வரும் தேவையற்ற தொலைபேசி அழைப்புகளால் அவருக்கு தொந்தரவு ஏற்படாது. அஜித் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கின்றார் மற்றும் எந்த சமூக ஊடக கணக்கும் அவருக்கு கிடையாது. அவர் ஏதேனும் செய்தி வெளியிட வேண்டும் என்றால் தனது செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா மூலம் தான் வெளியிட்டு வருகின்றார். இது அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

காரணம் அவர்கள் சோசியல் மீடியாவில் மிகவும் அவருக்காக குரல் கொடுக்கின்றார்கள். மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் சென்ற 2011ம் வருடம் ரசிகர் மன்றங்களை கலைக்க முடிவு செய்தார். இதற்கு காரணம் அவரின் பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவதை உணர்ந்தார். ஆனால் ரசிகர்கள் உருவாக்கிய ரசிகர் மன்றங்கள் இருக்கின்றது. அது சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது. தற்போது ரசிகர்கள் துணிவு திரைப்படத்தை மலேசியாவில் விளம்பரப்படுத்துவதற்காக வேற லெவலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நகரம் முழுவதும் கட்டிட உச்சியில் எல்இடி வைத்து விளம்பரம் செய்து வருகின்றனர்.