அமெரிக்கா முன்பதிவில் துணிவு திரைப்படத்தை வாரிசு திரைப்படம் முந்தி உள்ளது.

விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் வருகின்ற பொங்கல் வெளியீடாக ஜனவரி 11ஆம் தேதி ஒரே நாளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இரண்டு திரைப்படங்களுக்கான முன்பதிவு அமெரிக்காவில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிரிமியர் காட்சிகளுக்கான முன்பதிவு பொருத்தவரையில் துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்படத்திற்கான முன்பதிவு அதிகமாக நடைபெற்று வருகின்றது.

வாரிசு படத்திற்கு 83 இடங்களில் 192 காட்சிகளுக்கான முன்பதிவு மூலமாக 61,000 யுஎஸ் டாலரும் துணிவு திரைப்படத்திற்கு 77 இடங்களில் 148 காட்சிகள் மூலம் 32,000 யுஎஸ் டாலரும் கிடைத்திருக்கின்றதாம். இரண்டு திரைப்படமும் வெளியாக இன்னும் ஆறு நாட்கள் இருக்கின்ற நிலையில் பிரீமியர் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு இருக்கின்றது என கூறப்படுகின்றது.