நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடான ஜப்பானில் கடந்த 1ம் தேதி, ரிக்டர் அளவுகோலில் 7.6 என அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமடா உள்ளிட்ட மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட, நில அதிர்வு டோக்கியோ வரை சென்றடைந்தன. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

தற்போது வரை இறப்பு எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளது. இந்நிலையில், இஷிகாவா ப்ரிபெக்சரின் சுசு நகரில் 90 வயது மூதாட்டியை இடிபாடுகளுக்குள் இருந்து மீட்புப் பணியாளர்கள் வெற்றிகரமாக 124 மணிநேரத்திற்கு பிறகு மீட்டு அவரை காப்பாற்றியுள்ளனர். மீட்பு பணி தொடங்கி முதல் 72 மணி நேரத்திற்கு பிறகு அவர் கட்டாயம் இறந்து விடுவார் என சொல்லப்பட்ட நிலையில், மூதாட்டி உயிருடன்  மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.