உத்திரபிரதேசம் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 50 தலைவர்களை பற்றி அறிய தனியாக பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் சவர்க்கரின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் அப்துல் கலாம், பழங்குடியினம் போராடி பிர்சா முண்டா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் புரட்சியாளர்கள் என ஐம்பது பேரின் வாழ்க்கை வரலாற்றை கல்வித்துறை தற்போது சேர்த்துள்ளது. இந்த புதிய மாற்றம் நடப்பு கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு அமலாகும் என்று பள்ளிக்கல்வித்துறை.