குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஒரு டோஸ் போட வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 4 மாவட்டங்களில் உள்ள 9 மாதங்கள் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், அதாவது சுகாதாரத் துறை சார்பில் முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்புகளுக்குப் பிறகு என்னென்ன விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு பெரிய செய்தி குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், வெள்ளத்துக்கு பின் தட்டம்மை தடுப்பூசிகள் அனைத்து குழந்தைகளுக்கும் போட வேண்டும். குறிப்பாக 9 மாதங்கள் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முந்தைய நோய் தடுப்பு நிலைமையை பொருட்படுத்தாமல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஒரு டோஸ் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு வேறு எந்த தடுப்பூசியும் போடுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 4 வார இடைவெளியை பராமரிக்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய அந்த குழந்தைகளுக்கு எந்த வித தொற்றோ, நோயோ ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மருத்துவத்துறையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இந்த வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய, வெள்ள பாதிப்பில் ஏற்பட்ட இடங்களில் தங்கி இருந்த குழந்தைகள் அருகில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி குறிப்பாக 9 மாதங்கள் முதல் 15 வயது வரை குழந்தைகள் அனைவருக்கும் இந்த தடுப்பூசி கட்டாயம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியை ஒரு டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சந்தேகங்களுக்கு 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது..