
மத்திய அரசில் 8326 மல்டி டாஸ்கிங் ஸ்டாப், ஹவில்தார் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேர்வுகள் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த ஜூலை 31ம் தேதியுடன் அவகாசம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.