பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் “துணிவு”, தளபதி விஜய்யின் “வாரிசு” ஆகிய திரைப்படங்கள் வெளியாகியது. ஒரே நாளில் 2 உச்சநட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். தல-தளபதி படங்கள் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட் அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் வாரிசு, துணிவு பட சிறப்புக் காட்சிகளை வெளியிட்ட 8 திரையரங்குகளுக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதாவது, 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது..