இந்தியாவில் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தபால் நிலையத்தில் சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம். இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த திட்டத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி தள்ளுபடி பெறலாம். ஒரு குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே இதில் தொடங்க முடியும். இந்த திட்டத்திற்கு அரசு எட்டு சதவீதம் வட்டி வழங்குகின்றது. பெண் குழந்தைகள் 18 வயதிற்கு மேல் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் உயர்கல்விக்காக முந்தைய ஆண்டின் நிதியிலிருந்து 50 சதவீதம் வரை கடன் உதவி பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.