சென்னை ஆயிரம் விளக்கு பகுதி சேர்ந்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி தமிழ்ச்செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் இந்த அநாகரிகமான செயலை தட்டிக் கேட்ட மாணவியின் பெரியம்மா மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்.

இதனையடுத்து மாணவியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரவுடி தமிழ்ச்செல்வனை கைது செய்தனர். இந்த நிலையில் காவல் நிலைய குளியல் அறைக்கு சென்ற பொழுது வழுக்கி விழுந்ததால் கை உடைந்து அந்த ரவுடிக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.