மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ராய்கஞ்ச் பகுதியில் சம்பாதாஸ் என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக ஹரிடாய் தேவ் பிஸ்வாஸ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இவர் தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என கூறி சம்பாவிடம் பழகினார். இவர்கள் இருவரும் இன்ஸ்டா மூலம் பழகி காதலித்த நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு திருமணம் ஆகி 3 மாதங்களுக்கு பிறகு தான் தேவதாஸ் ஐபிஎஸ் அதிகாரி இல்லை என்பது சம்பாவுக்கு தெரியவந்தது. அவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை அறிந்த சம்பா மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தன் கணவனிடம் கேட்டபோது அவர் கடுமையாக தாக்கி துன்புறுத்தியுள்ளார். இதனால் தன் கணவன் மீது சம்பா காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.