ஆப்பிரிக்க நாடுகள் கொசுக்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. கொசுக்களால் பரவும் நோய்களால் ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதன்படி கடந்த சில மாதங்களில் எத்தியோப்பியாவில் மலேரியாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அதாவது எட்டு மாதங்களில் மட்டும் 32 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் மலேரியா வேகமாக பரவி வருவதாக உள்ளூர் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கு வாரம்தோறும் 70 ஆயிரம் வழக்குகள் வரை பதிவு செய்யப்படுகின்றது.