தாய்லாந்து நாட்டை சேர்ந்த டாட்டூ கலைஞர் ஓங் டாம் சோரோட் நகைச்சுவை நடிகருடனான நேர்காணல் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார். அதாவது இவர் எட்டு இளம் பெண்களை திருமணம் செய்து மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தன்னுடைய யூடியூப் சேனலில் எட்டு மனைவிகளையும் அவர் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அவரின் முதல் மனைவியை நண்பரின் திருமணத்திலும், இரண்டாவது மனைவியை மார்க்கெட்டிலும், மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவிகளை சமூக வலைத்தளங்களிலும் வைத்து பழகியுள்ளார்.

இவ்வாறு அவர்களை காதலித்த இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களில் இரண்டு மனைவிகள் தற்போது கர்ப்பமாக உள்ளதாகவும் முதல் மனைவிக்கும் ஒரு மகன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எட்டு மனைவிகளுடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கொண்டாட்டமான வாழ்க்கைக்கு கணவனும் மனைவியும் புரிந்து கொண்டாலே போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.