அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள சௌராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் வைத்து மூன்றாவது போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் ஆரம்பத்திலேயே களத்தில் இறங்கிய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் அரை சதத்தை உறுதி செய்தார். மேலும் தொடர்ந்து விளையாடிய அவர் 70 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருந்தார். இதனால் 87 பந்துகளில் சதம் அடித்த ஹர்மன்பிரீத் கவுரின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.