
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இஸ்ரவேல் 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என இஸ்ரவேல் சிறுமியை மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் இஸ்ரவேலை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் இஸ்ரவேலுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 6500 அபராதகும் விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.