உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் தனது மனைவியையும் நண்பனையும் கணவனே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷீத் என்பவர் தனது நண்பன் ஃபஹீமை விருந்துக்கு அழைப்பது போல வரவழைத்து, தனது மனைவி ஷப்னம் மற்றும் நண்பர் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.
இந்த பயங்கரச் சம்பவத்தை நேரில் பார்த்த 7 வயது மகன் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளான். கொலையைச் செய்துவிட்டு மகனிடம் ஆறுதல் கூறிவிட்டுத் தப்பியோடிய தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒரு பக்கம் கொலையான அம்மா, மறுபக்கம் கைதான அப்பா என ஆதரவின்றித் தவிக்கும் 7 பிள்ளைகளின் நிலை பார்ப்போர் நெஞ்சை உருகச் செய்துள்ளது.
