டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சென்ற டிசம்பர் 6ம் தேதி 7 மாத கர்ப்பிணி பெண் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மாமியார் சித்திரவதை செய்ததாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இப்போது அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்பெண் டெல்லி பவானா பகுதியில் வசிக்கும் குஷ்பூ (26) என அடையாளம் காணப்பட்டார்.

இதனிடையில் பெண்ணின் குடும்பத்தினர், அப்பெண் அவரது மாமியாரால் துன்புறுத்தப்பட்டதாக கூறியுள்ளனர். மாமியாரால் தான் குஷ்புக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என பெண்ணின் சகோதரர் சந்தீப் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தை கவனத்தில் கொண்ட மகளிர் ஆணையம் டெல்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவற்றில் “7 மாத கர்ப்பிணியை அவரது கணவர் மற்றும் மாமியார் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தினர்.

இதனால் அப்பெண் பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லி காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பி பாதிக்கப்பட்டவருக்கு அனைத்து உதவிகளையும் செய்து உள்ளோம் என மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தன் டுவிட்டர் பக்கத்தில் தனது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதுபற்றி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.