
குஜராத்தில் 64 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதலர்களுக்கு அவரது குடும்பத்தினர் மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த 1961-ம் ஆண்டு என்பவர் ஷர்ஷ்-முர்து என்ற இளம் ஜோடி காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு மகன், மகள், பேரன் பேத்திகள் உள்ளனர். இந்த நிலையில் ஷர்ஷ்-முர்து தம்பதியின் 64-வது திருமண நாளை முன்னிட்டு அவரது பேரன் பேத்திகள் மீண்டும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.