விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநில அரசு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை அறிவித்துள்ளது .அதாவது 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திட்டம் மூலமாக பல விவசாயிகளும் பயனடைவார்கள். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு மூன்று புதிய திட்டங்களை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த திட்டங்களை தொடங்குவதற்கு ரூபாய் 200 கோடியை மாநில அரசு ஒதுக்கி உள்ளது.