எருமசாணி விஜய் எனில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. இவருக்கென டிஜிட்டல் உலகத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இதையடுத்து எருமசாணி விஜய் வெள்ளித்திரையிலும் காலடி வைத்துவிட்டார். ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எருமசாணி விஜய்.

மேலும் அருள்நிதியை வைத்து டி ப்ளாக் எனும் படத்தையும் இயக்கி அவர் வெற்றி கொடுத்தார். இந்நிலையில் எருமசாணி விஜய்யின் திருமண தகவல் வெளியாகியுள்ளது. அவர் 6 ஆண்டாக காதலித்து வந்த தன் காதலியை கரம் பிடிக்க உள்ளார். காதலர் தினமான நேற்று அவர்கள் திருமண செய்தியை அறிவித்த நிலையில், ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Nakshatra Murthy (@nakshatra.murthy)