நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி “போடா போடி” திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார். இதையடுத்து பெரும்பாலான திரைப்படங்களில் நடித்தபோதும் முன்னணி நடிகை என்ற இடத்தை அவரால் பிடிக்க இயலவில்லை. இப்போது வரலட்சுமி தெலுங்கு திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி வெழுத்து வாங்குகிறார்.

அவருக்கென அங்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இந்நிலையில் தமிழ் திரையுலகம் தன் திறமையை மதிக்கவில்லை. நல்ல கலைஞர்களை தவறவிடுகிறது என வரலட்சுமி கூறியுள்ளார். இப்போது வரலட்சுமி தமிழில் கொன்றால் பாவம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதை கன்னட டைரக்டர் தயாள் பத்மநாபன் இயக்கி உள்ளார்.