ஒரு தாய் பத்து மாதங்கள் வயிற்றில் கருவை சுமந்து அதன்பின்னர் ஒரு குழந்தையை பெற்றெடுப்பார். அல்லது ஒரு சிலருக்கு இரட்டை குழந்தையும் பிறக்கும். இந்நிலையில் மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் அரிதான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெசிகா என்பவர் 6 மாதங்களில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

இது எப்படி சாத்தியமானது என்றால், முதல் முறை கர்ப்பமான 3 மாதங்களுக்குப் பிறகு அந்த பெண் மீண்டும் கர்ப்பமானார். இதனால் அந்த பெண்ணின் வயிற்றில் வெவ்வேறு வயதுடைய கருக்கள் ஒரே சமயத்தில் வளர்ந்தன. இதை மருத்துவ துறையில் ‘சூப்பர் ஃபிட்னெஸ்’ என்பார்கள். கர்ப்பத்தின் தொடக்க நாட்களில் ஒரு பெண் உடலுறவில் ஈடுபட்டால் இது நடக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.