குஜராத் மாநிலத்தின் வடோதரா நகரில், சற்று வியப்பூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு  ரோட்டு  வண்டி கடையில்  சலுகையில் பாணி பூரி வாங்கிய பெண் ஒருவர், 20 ரூபாய்க்கு 6 பாணி பூரி வேண்டும் என வாதிட்டார்.

ஆனால், அந்த விற்பனையாளர் 4 மட்டுமே வழங்கியதால் கோபம் கொண்ட அந்த பெண், ரோட்டில்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் சனிக்கிழமை நடைபெற்றது. ரோட்டின் நடுவே உட்கார்ந்து, “20 ரூபாய்க்கு 6 கோல்கப்பா குடுக்கணும், இல்லையென்றால் நான் இங்கிருந்து கிளம்ப மாட்டேன்” என பிடிவாதம் பிடித்தார் அந்த பெண்.

இதை  பொது மக்கள்  வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கினர். பாதையில் காத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.

“>

 

பின்னர் போலீசார் வந்ததும், அவர்கள் அந்த பெண்ணிடம் பேசி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அந்த பெண் கண்ணீர் விட்டபடியே “நியாயமான  விற்பனை வேண்டும்” என வலியுறுத்தினார். பல மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போலீசார் பெண்ணை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

இறுதியில், அந்த பெண்ணுக்கு மீதமுள்ள இரண்டு  பாணி பூரி வழங்கப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பாரிய விவாதத்துக்குப் பால் ஆனது.