ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்னட் போர்ட்(57) என்ற பெண் 4.3 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டுக்கு ஆன்னட் போர்ட்டுக்கு விவாகரத்து ஆனது. இதனால் தனக்கு ஒரு நல்ல துணை வேண்டும் என பிளண்டி ஆப் ஃபிஷ் என்ற டேட்டிங் ஆப் மூலம் தேடி வில்லியம் என்பவரை ஆன்னட் போர்ட் காதலித்து வந்தார்.

ஆனால் வில்லியம் ஆன்னட் போர்ட்டிடம் இருந்து பணத்தை பறித்து ஏமாற்றி விட்டார். இதேபோல பேஸ்புக் மூலம் ஆன்னட் போர்ட்டுக்கு நெல்சன் என்பவர் அறிமுகமானார். அவரும் அந்த பெண்ணை  ஏமாற்றி அவரிடம் இருந்த பணம் மற்றும் வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டார். இப்படி காதல் என்ற பெயரில் அவர்கள் ஆன்னட் போர்ட்டிடம் இருந்து 4.3 கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.