
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026 ஆம் வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் 5,000, 10,000 கோடி ரூபாயை விட்டுவிட்டு சேவை செய்வதற்காக அரசியலுக்கு வருவதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த், “ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்” வைக்கக் கூடாது என்பதற்காகவே பல ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார்.