இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 500 ரூபாய் நோட்டு பற்றி முக்கிய அறிவிப்பை ஒன்றை RBI வெளியிட்டு இருக்கிறது. தற்போது சந்தையில் 2 வகை 500 ரூபாய் தாள்கள் காணப்படுகிறது. அந்த 2 நோட்டுகளுக்கும் இடையில் சிறு வித்தியாசம் இருக்கிறது. இந்த 2 வகை நோட்டுகளில் ஒன்று போலியானவை ஆகும். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. RBI 500 ரூபாய் நோட்டுகளுக்கு சில வழிமுறைகள் இருக்கிறது.

அதன்படி  நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்படும். எனினும் அதுபோல சில போலி ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டு, சந்தையில் விடப்படுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து, மகாத்மா காந்தியின் போட்டோ உள்ளிட்டவை உண்மையான ரூபாய் தாள்களில் இருக்கும். காந்தியின் புகைப்படத்துக்கு அருகாமையில் பச்சைகம்பி ஒன்று இருக்கும்.

இருப்பினும் இணையத்தில் பரவும் புகைப்படம் ஒன்றில் மகாத்மா காந்தி புகைப்படத்துக்கு அருகாமையில் பச்சைக் கம்பி இருக்கும் 500 ரூபாய் தாள் இருந்தால், அது போலியானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே அதை மக்கள் வாங்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலி தகவல் என விளக்கி இருக்கும் பிஐபி, மகாத்மா காந்தி புகைப்படத்துக்கு அருகாமையில் பச்சைக் கம்பி இருந்தாலும் உண்மையான தாள் தான் என தெரிவித்துள்ளது.