மத்திய பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் (காலை 11 மணிக்கு) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 2024இல் தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் இது. எனவே, இந்த பட்ஜெட்டில் ஏழை – எளிய, நடுத்தர மக்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சாமானியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் பெருமளவில் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தையும் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கடந்த நிதியாண்டில், இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டது. சென்னையில் இன்று கேஸ் சிலிண்டர் ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.