
ஜலந்தரைச் சேர்ந்த ஸ்கிராப் டீலர் ப்ரீதம் லால் ஜக்கிக்கு 67 வயதில் அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வந்த இவர், தற்போது 2.5 கோடி ரூபாய் பரிசை வென்றுள்ளார்.
பிரீதம் லால் ஜக்கி கடந்த 30 ஆண்டுகளாக ஸ்கிராப் விற்பனை செய்து வந்தாலும், குடும்பத்தை நடத்துவதற்கே போராடி வந்தார். தற்பொழுது,500 ரூபாய் கொடுத்து வாங்கிய லாட்டரி சீட்டு இவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டுள்ளது.
இந்த பணத்தை வைத்து சொந்தமாக ஒரு கடை மற்றும் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். மேலும், 25 சதவீத பணத்தை சமூகப் பணிகளுக்கு செலவிடவும் முடிவு செய்துள்ளார். இந்த சம்பவம் பலருக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது. 50 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வந்த இவருக்கு இப்போதுதான் அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது.