தமிழ் சினிமாவில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் பிரபு தேவா. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரது திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இந்த நிலையில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அதே சமயம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் பிரபுதேவா இளைஞர்களுடன் வீட்டில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் 50 வயதிலும் அதே நளினத்துடன் எப்படி ஆடுறீங்க சார் என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Prrabhudeva இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prabhudevaofficial)