
தென்காசி மாவட்டம் கடங்கநேரி கிராமத்தில் 5 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் கனமழை பெய்ததால் இரும்பு மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் 5 வயதுடைய ஜமித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
9 வயதுடைய பிரதிக்ஷா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.