வயதான ஒரு தம்பதி ஸ்கூட்டரில் பேங்கிற்கு சென்று விட்டு ஒரு கடையின் முன்பு நிறுத்தி வட பாவ் சாப்பிட நினைத்துள்ளனர். அப்போது பேங்கில் இருந்து கொண்டு வந்த நகையை ஒரு பேக்கில் வைத்து கூட்டரின் முன் பக்கத்தில் வைத்துள்ளனர் முதியவர் வட பாவ் வாங்க கடைக்குள் சென்றவுடன் ஒரு நபர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து அந்தப் பெண்மணியிடம் ஏதோ கீழே கிடப்பதாக கூறி திசை திருப்புகிறார்.

அந்த சமயத்தில் வேறு ஒரு நபர் வந்து ஸ்கூட்டரில் வைத்திருந்த நகை பேக்கை எடுத்துவிட்டு தப்பிவிட்டார். முதலில் நிலைமையை உணராத அந்த பெண் பின்னர் உதவி கேட்டு கத்திக் கொண்டே அந்த நபரின் பின்பு ஓடினார். இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதனை மையமாக வைத்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடு போன பேக்கில் 5 லட்சம் மதிப்புள்ள நகைகளும் செல்போன்களும் வங்கி ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.