உத்தரப் பிரதேசத்தில் ஒரு வழக்கைத் தீர்ப்பதற்காக ரூ. 5 லட்சம் பேரம் பேசி, அதில் முன்பணமாக ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரி ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் தடுப்புப் பிரிவினர் ரகசியத் திட்டமிட்டு அவரைப் பிடித்தபோது, தப்பிக்க வழியில்லாத அந்த அதிகாரி, பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் அதிகாரிகளை மிரட்டவும் தியேட்டர் பாணியில் கூச்சலிடத் தொடங்கினார்.
இந்நிலையில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க அவர் செய்த இந்த சர்க்கஸ் வித்தைகள் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. ஊழல் தடுப்புப் படையினர் அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியபோதும், தான் நிரபராதி என்று கத்திக்கொண்டே அடம் பிடித்தார்.
घूस लेते पकड़े जाने पर फिल्मी स्टाइल में चिल्लाया पुलिस इंस्पेक्टर..👮
वर्दी का रंग खाकी है। लेकिन नीयत का रंग अब पूरी तरह काला हो चुका है।
बेंगलुरु में जिस इंस्पेक्टर गोविंद राजू को कानून की रक्षा करनी थी, वो खुद कानून का सौदा करते पकड़ा गया।
थाना अब न्याय का मंदिर नहीं,… pic.twitter.com/KLJbJpdLCE
— Suren Yadav (@surenrk) January 31, 2026
“>
இருப்பினும், ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் உறுதியான ஆதாரங்களுடன் அவர் பிடிபட்டதால், அவரது கூச்சல் எடுபடவில்லை. “மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே இப்படி ஊழலில் ஊறிப் போயிருப்பது வேதனையானது” என சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
