
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார் (90). இவருக்கு மோகன ராணி என்ற மனைவியும் அரவிந்தன் (33) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் அரவிந்தன் இந்தியன் வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த வருடம் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அதாவது அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இவருடைய தாய் மோகன ராணி கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் தந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக இவருடைய வீட்டிலிருந்து யாருமே வெளியே வரவில்லை.
அதோடு வீட்டில் இருந்தது துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கடந்த புதன்கிழமை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி காவல் துறையினர் சென்று பார்த்த நிலையில் அங்கு ஒரு அறையில் கோவிந்தசாமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது. பின்னர் மற்றொரு அறையில் அரவிந்தன் இருந்துள்ளார். மேலும் கோவிந்தசாமி சடலத்தை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.