கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் பாலா. இதனையடுத்து குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் இன்னும் பிரபலமானார். பின்னர் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது, மேலும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துருவருகிறார்.

மேலும் ஏழைகள் மற்றும் முதியோருக்கும் உதவும் விதமாக இலவச ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து உதவி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அந்த ஐந்து ஆம்புலன்ஸ் உடன் எடுத்த புகைப்படங்களை மொத்தமாக பதிவிட்டு, அவை தான் தன்னுடைய 5 குழந்தைகள் என குறிப்பிட்டு உள்ளார்.