நடிகர் ரஜினியின் மூத்த மகள் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி கேமியோ ரோலியில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, கோச்சடையான் திரைப்படத்தில் நடித்த போது சௌந்தர்யா ஆக்சன், கட் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் தான் கே எஸ் ரவிக்குமாரை பக்கத்தில் வைத்துக் கொண்டேன் என்று கூறினார்.

அதேசமயம் தனுஷ் கூட எனக்காக இரண்டு கதைகளை வைத்திருந்தார். ஆனால் நான் மறுத்து விட்டேன், அதனை அவர் புரிந்து கொண்டார் என்று கூறியுள்ளார். இதற்கு காரணம் பெரிய பெரிய இயக்குனர்கள் எனக்கு ஆக்ஷன் கட் சொல்லி நான் நடித்து தற்போது தன்னுடைய மகள்கள் அவ்வாறு சொல்வதில் உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார்.