சென்னையில் உள்ள ஆர்.கே நகர் பகுதியில் திமுக சார்பில் எளியோர் எழுச்சி நாள் என்ற பெயரில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 48 ஜோடிகளுக்கு திருமணம் செய்து கொண்டார். இதற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இதே போன்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று நடைபெற்ற திருமண விழாவில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடந்த நிலையில் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு தலா 25000 மொய்ப்பணம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு கட்டில், மெத்தை, பீரோ, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பாத்திரங்கள் என  என 30 வகையான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் 48 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து பண உதவி செய்ததோடு 30 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை கொடுக்கப்பட்டது மணமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.