இந்தோனேசியா நாட்டில் கலேம்பங் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு சரிதா என்ற 45 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் கடந்த 3 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் கிராமத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அந்தப் பெண்ணை குடும்பத்தினருடன் சேர்ந்து கிராம மக்களும் தேடினர். அப்போது ஒரு இடத்தில் பரிதாவின் உடைமைகள் கண்டறியப்பட்டது.

அதன் அருகே மலைப்பாம்பு ஒன்று பெரிய வயிற்றுடன் நகர முடியாமல் கிடந்தது. இந்த பாம்பு 5 மீட்டர் (16 அடி) நீளம் கொண்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தனர். அப்போது பரிதா உள்ளே சடலமாக கிடந்தார். மேலும் பாம்பின் வயிற்றை முழுமையாக கீறி சரிதாவின் உடலை ‌ கிராம மக்கள் மீட்டனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.