ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், கோரமண்டல் ரயிலில் 1257, யஸ்வந்த்பூர் ரயிலில் 1039 என மொத்தம் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பயணிகளை தொடர்பு கொள்ள முடியாத உறவினர்கள் சிறப்பு ரயிலில் ஒடிசா வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது பயணக் காப்பீட்டுத் தேர்வை டிக் செய்வது அவசியமாகும். ஐஆர்சிடிசி வெறும் 45 பைசாவுக்கு ரூ.10 லட்சம் காப்பீட்டை வழங்குகிறது. எதிர்பாராத விபத்து காரணமாக மரணம் அல்லது காயம் ஏதேனும் ஏற்பட்டால் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு முறையும் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இன்சூரன்சை டிக் செய்து நாமினியை சேர்த்திருக்க வேண்டும், அப்போது தான் உங்களுக்கு பணம் கிடைக்கும்.