இந்தியாவில் 26 பசுமை விரைவுச் சாலைகள் 2024 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மேலும் நெடுஞ்சாலைகள் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியா இருக்கும் என்றும் சுங்க வரி வசூலிக்கும் விதிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக சுங்கச்சாவடிகளில் எளிதாக கட்டணம் செலுத்தும் வகையில் மத்திய அரசு Fastag-ஐ அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.