தபால் நிலைய 44,228 வேலைகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்திய தபால் துறையின் இணையத்தளமான indiapostgdonline.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று அங்கு மேலே இருக்கும் STAGE REGISTRATION என்பதை அழுத்த வேண்டும். அதனை அழுத்தியதும் திறக்கும் பக்கத்தில் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, தந்தை பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். அடுத்ததாக மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலுக்கு வரும் ஓடிபி ஆகியவற்றை பதிவிட்டு ஆதார் எண் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றிய பிறகு சமர்ப்பிக்க வேண்டும்.
இதனை செய்ததும் சுயவிவர பக்கம் வரும். அதனை உறுதி செய்ததும் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் வரும். இதனை குறிப்பெடுத்துக் கொண்டு continue apply என்பதில் பதிவிட்டு மாநிலத்தை தேர்வு செய்ததும் மொபைலுக்கு வரும் ஓடிபி பதிவிட வேண்டும். பிறகு வீட்டு முகவரி மற்றும் கல்வி தகுதியை பதிவேற்றம் செய்ய வேண்டும். அடுத்து செலக்ஷன் டிவிஷன் என்பதில் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் பகுதியை தேர்வு செய்து டிக்ளரேஷன் என்பதில் ஓகே கொடுத்து 100 ரூபாய் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனை முடித்ததும் நீங்கள் வேலைக்கு விண்ணப்பித்த அப்ளிகேஷன் வரும். இதனை பதிவிறக்கம் செய்து தேர்வில் பயன்படுத்தலாம்.