
தமிழகத்தில் தமிழ் மொழிக்காக தொண்டாற்றிய முதியவர்களுக்கு மாதந்தோறும் அரசாங்கத்தால் உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி 3500 மாத உதவித்தொகை மற்றும் 500 ரூபாய் மருத்துவ படி சேர்த்து மொத்தம் 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகையை தமிழ் மொழிக்காக தொண்டாற்றியவர்கள் பெற தகுதியுடையவர்கள். இந்நிலையில் தற்போது தமிழக அரசு இந்த உதவி தொகை தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
அதன்படி 58 வயது நிரம்பியவர்கள் உரிய ஆவணங்களுடன் தமிழ் வளர்ச்சி துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் ஆன்லைனில் https://tamilvalarchithurai.tn.gov.in/என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 ஆகும். எனவே தகுதி உள்ளவர்கள் உரிய கால அவகாசத்திற்குள் விண்ணப்ப தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.