தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக 35 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 75 வருட திமுக அரசியல் வரலாற்றில் இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஆனால் அதிமுக 35 தொகுதிகளுக்கு மேல் 3 முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி கடந்த 1984, 1989, 19991 ஆகிய தேர்தல்களில் அதிமுக கூட்டணி முறையே 37, 38, மற்றும் 39 இடங்களில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தற்போது திமுக கூட்டணி இந்த முறை 35 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியான நிலையில் 40 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகிப்பது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.