தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. இவர் திரை உலகில் நுழைந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. அண்மையில் இவர் நடிப்பில் ராகி என்ற திரைப்படம் வெளிவந்து ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து விஜயின் 67 திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை திரிஷா கலந்துகொண்ட ஒரு பேட்டியில் எப்படி இத்தனை வருடங்களாக ஒரே மாதிரி ஸ்லிம்மாக இருக்கீங்க என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த திரிஷா, இந்தக் கேள்விக்கு சரியான பதில் எதுவும் என்னிடம் இல்லை. இதற்கு குடும்ப ஜீன் என்று சொல்லலாம். வேறு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. எப்போதும் என்னை நான் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று த்ரிஷா கூறியுள்ளார். இதுவே அவர் ஸ்லிம்மாக இருக்க காரணம் என கூறப்படுகிறது.