இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தற்போது 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்துள்ளது. மேலும் இதனால் 3 லட்சம் அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது