வெப்ப அலை காரணமாக நண்பகல் 12 மணி முதல் மூன்று மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று வேலூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் வெயிலின் தாக்கத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அதனைப் போலவே கரூர் மாவட்டத்திலும் வெப்ப அலை வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் மூன்று மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.